பட்ஸ் மூலம் காதை சுத்தம் செய்பவரா நீங்கள்? இனியும் அந்த தவறை செய்யாதீங்க
இன்று பெரும்பாலான நபர்கள் காதுகளை சுத்தம் செய்வதற்கு இயர் பட்ஸ்களை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இவை பாதுகாப்பானதா என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இயர் பட்ஸ் பயன்படுத்தக்கூடாதா?
காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யும் போது அது நமக்கு அதிர்ச்சி போன்றதாகும். இதனால் காதுகளில் வெட்டுக்கள் ஏற்படலாம். மேலும் செவிப்பறைக்கு பாதுகாப்பானது அல்ல.. எனவே பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை காதுகளை சுத்தம் செய்ய பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
பேபி ஆயில் காதுகளை சுத்தம் செய்ய பயன்படுகின்றது. நம் காதுகளில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் பேபி ஆயிலை விட்டு, பின்பு சுத்தமான துணியால் காதை சுத்தம் செய்தாலே போதுமாம்.
மேலும் குளிக்கும் போது நம் காதுகளை சுத்தம் செய்து கொள்ளலாம். வேறு எதையும் பயன்படுத்த தேவையில்லை. இவை உங்களுக்கு சரியான தீர்வு அளிக்கவில்லை எனில் காது சிகிச்சை மருத்துவரிடம் காதுகளை சுத்தம் செய்யும் வழியை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.