தண்ணீர் குடிப்பதற்கு யோசிக்கிறீங்களா? ஆயுட்காலம் குறைந்திடும் ஜாக்கிரதை
தண்ணீ குடிப்பதற்கு யோசிக்கும் நபர்களின் ஆயுட்காலம் குறையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தண்ணீர் குடிப்பதற்கு யோசனை
நம் உடலுக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியமாகும். ஆம் உடலில் தண்ணீர் சத்து இல்லாமல் பல பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, இறுதியில் உயிரிழப்பும் ஏற்படுகின்றது. விரைவில் முதுமையை ஏற்படுத்தும் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.
தண்ணீரின் அவசியம்
செரிமான செயல்முறையை எளிதாக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கொழுப்பைக் கரைக்கவும், நீரிழப்பைத் தடுக்கவும் தண்ணீர் மிகவும் அவசியம்.
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் ஒரு நாளைக்கு குடிக்கும் தண்ணீரின் அளவு முற்றிலும் மாறுபடுகின்றது. பெரியவர்கள் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும்.
சீரம் சோடியம் அளவு
அதாவது மனிதர்களின் உடலில் திரவ அளவு குறையும் போது சீரம் சோடியம் அளவு கடுமையாக உயர்கின்றாம். மேலும் 143க்கு மேல் சீரம் சோடியம் அளவு சென்றால் அகால மரணத்திற்கும், நாள்பட்ட வியாதிக்கும் வழிவகுக்கும்.
மேலும் மாரடைப்பு, பக்கவாதம், நுரையீரல் பிரச்சினை, சர்க்கரை நோய், டிமென்ஷியா போன்ற நோய்களும் ஏறபடுகின்றதாம். ஆதலால் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு முதல் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.