குளிக்கும் போது இந்த தவறை தெரியாமல் கூட செய்யக்கூடாதாம்..
கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பலரும் தினமும் காலை இரவு என இரண்டு முறை குளிப்பதுண்டு.இந்த நேரத்தில் குளிக்கும்போது செய்யக்கூடாத சில தவறுகள் குறித்துப் பார்ப்போம்.

என்னென்ன தவறுகள்?
ஒவ்வொரு முறையும் துண்டை பயன்படுத்திய பிறகு துவைக்க வேண்டும்.கோடைக்காலத்தில் துண்டுகளை அடிக்கடி துவைப்பது நல்லது.
குளியல் நாரை முறையாக மாற்ற வேண்டும்.இயற்கை நார் என்றால் 3-4 வாரங்களுக்கும், பிளாஸ்டிக் என்றால் 2 மாதங்களுக்கு மாற்ற வேண்டும்.

வாரம் ஒரு முறையாவது ஷவரை சுழற்றி சுத்தம் செய்ய வேண்டும்.சுத்தம் செய்யாமல் இருந்தால் அதில் உள்ள பாக்டீரியாக்களால் தொற்று நோயை ஏற்படுத்தலாம்.
குளித்த பிறகு சருமம் வறட்சியாக இருக்கும்.எனவே, உங்களுக்கான மாய்ஸ்ச்சரைசரை மறக்காமல் முகத்தில் தடவ வேண்டும்.

பிறப்புறுப்பில் சோப் பயன்படுத்துவரை தவிர்க்க வேண்டும்.சோப் பயன்படுத்துவது உங்களுக்கு தொற்று பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.வெதுவெதுப்பான தண்ணீரால் சுத்தம் செய்வது மட்டுமே சிறந்தது.
குளித்து முடித்த பிறகு துண்டை வைத்து அழுத்தமாக துடைக்கக்கூடாது.இது உடலில் எரிச்சலை ஏற்படுத்தலாம்.மிருதுவான துண்டை பயன்படுத்தி, மெதுவாக துடைக்க வேண்டும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |