முட்டையுடன் இதை சேர்த்து சாப்பிடாதீங்க! பல பிரச்சினை ஏற்படுமாம்
அசைவ பிரியர்களின் உணவில் முக்கிய இடம்பிடித்திருக்கும் முட்டை, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிட்டால் அவை பிரச்சினையை ஏற்படுத்தி விடுகின்றது.
ஆம் வாயு தொல்லை, குமட்டல், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் இவற்றினை ஏற்படுத்துகின்றது. முட்டையுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவினை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
முட்டையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
பொதுவாக தேநீர் உடம்பில் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்து புரதத்தை உறிஞ்சுவதை தடுக்கின்றது. பெரும்பாலான நபர்கள் முட்டை போண்டாவுடன் டீ அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவ்வாறு சாப்பிடுவது பல தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
இதே போன்று சோபா பாலும் புரதத்தை உறிஞ்சுவதை தடுக்கின்றது. எனவே சோயா பாலுடன் முட்டையை சேர்த்து சாப்பிடக்கூடாது.
அடுத்து நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாத பொருள் முட்டை மற்றும் சர்க்கரை தான். ஏனெனில் இவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றாக செல்வதால் உடம்பிற்கு தீங்கு ஏற்படுகின்றது. இதனால் தான் பிஸ்கட், பப்ஸ் இவற்றில் முட்டை சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகம் சாப்பிடக்கூடாது என்று கூறப்படுகின்றது.
முட்டையுடன் சேர்த்து வாழைப்பழத்தினை சாப்பிட்டால் அது அஜீரணத்தினை ஏற்படுத்தும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதே போன்று முட்டையையும் பிரியாணியையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக்கொள்வது மட்டுமின்றி, அஜீரணத்தினையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு நீங்கள் சாப்பிட்டால் நான்றாக உடல் உழைப்பினை மேற்கொண்டால் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாமல் இருக்கும்.