வீட்டிலேயே அவல் வைத்து மொறு மொறு வடை செய்ங்க - வெறும் 10 நிமிடம் போதும்
வடை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இதை செய்வதற்கு பலரும் மாவு அல்லது பருப்பு பயன்படுத்துவார்கள்.
ஆனால் புதுவிதமாக அவல் வடை போலவே இருக்கும் அவல் வடை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கப்போகின்றோம். இந்த வடை செய்ய கடலை பருப்பு வெங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்கப்படும்.
குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம் அவ்வளவு ஊட்டச்சத்து நிறைந்துள்ளது இந்த வடையில். கொங்சம் காரமாகவும் மென்யைாகவும் வடை செய்தால் யாருக்கு தான் பிடிக்காது. இப்போது அவல் வடை செய்யும் முறை பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அவல் - 1 கப்
- சீரகம் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி - சிறிதளவு
- பச்சை மிளகாய் - 5
- வெங்காயம் - 2
- உப்பு - சுவைக்கு ஏற்ப
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்யும் முறை
அவல் வடை செய்வதற்கு முதலில் அவலை நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை அரை மணி நேரத்திற்கு பின்னர் எடுத்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வடை செய்வதற்குத் தேவையான சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற வைத்த அவல், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையுடன் சிறிதளவு உப்பு, சீரகம், அரை கப் கடலை மாவு போன்றவற்றையும் ஒரு உருண்டை வரும் கெட்டி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது மாவை தயார் செய்து முடிந்தது. இதையடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
எண்ணெய் நன்கு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் போதும். இந்த வடைக்கு நீங்கள் உங்களுக்கு பிடித்த கைட்டிஷ் வைத்து சாப்பிடலாம். இது மற்றைய வடைகளை விட மென்மையும் சுவையும் நிறைந்ததாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
