டீக்கு இப்படியொரு பவரா? இனி இந்த கவலை இருக்காது!
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
உற்சாக பானம், விருந்தினர் அழைப்பு பானம், கவலைகளை போக்கும் டீ இப்படி பல கோணங்களில் மக்கள் ரசித்து குடிக்கப்படும் பானமாக டீ உள்ளது.
இன்னும் மன அழுத்தம் அதிகமாக உள்ள நேரங்களில் டீ அதிகமாக குடிப்பார்கள். அந்த சமயத்தில் டீ மருந்தாக செயற்படுகிறது. தினசரி வழக்கமான நேரத்திற்கு டீ குடிக்காவிட்டால் தலைவலி வரும் என பலரும் கூறி கேட்டிருப்போம்.
ஆனால் அப்படி தலைவலி வருவதற்கு ஒரு அறிவியல் காரணம் உள்ளது என நிபுணர்கள் விளக்கமாக கூறுகிறார்கள். பால் கலந்த டீயை விட டீயில் கிரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ என பல்வேறு வகைகள் உள்ளன.
அந்த வகையில், டீ எப்படி தலைவலியை குறைக்கிறது என்பதை தெளிவாக பார்க்கலாம்.
அறிவியல் காரணம்
பால் சேர்த்து தயாரிக்கப்படும் டீயை மட்டுமே பலரும் விரும்பி குடிக்கிறார்கள். இந்த வகையான தேநீர் தலைவலியை தீர்க்க நேரடியாக உதவி செய்யாது. அடிக்கடி தலைவலி வரும் பிரச்சினையுள்ளவர்கள் டீ குடிப்பதால் தலைவலி சரியாகாது.
அதாவது அநேகமானவர்களுக்கு வெயிலில் சென்று வீடு திரும்பினால் அதிகமாக தலைவலி வரும். இது நீரிழப்பு காரணமாக வருகிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். டீ குடிக்கும் பொழுது நீர்ச்சத்து உடலுக்குள் செல்கிறது இதுவே தலைவலி குணமாவதவற்கான காரணம் ஆகும். அதே போன்று நீரேற்றத்திற்காக குடிக்கும் தேநீர் பல வகைகளில் செய்து குடிக்கலாம்.
இஞ்சி தட்டிப்போட்டு டீ குடித்தால் ஒற்றைத்தலைவலி குணமாகும். தலைவலி பிரச்சினையுள்ளவர்களுக்கு இஞ்சி டீ நிவாரணியாக செயற்படுகிறது. இஞ்சி உடன் ஏலக்காய் மற்றும் இலவங்க பட்டை போன்ற மசாலா பொருட்கள் சேர்த்து குடித்தால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாகி, வலி ஏற்படுவது குறையும். அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
கடந்த 2020-ன் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இஞ்சி ஒற்றைத்தலைவலி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
மாறாக தேநீரில் உள்ள நறுமணம் தலைவலியை குணப்படுத்தும் என்பதை நிரூபிக்க போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை. தேநீர் தலைவலியை தூண்டும் என சிலர் நினைக்கிறார்கள். அதற்கான காரணம், காபி மற்றும் டீயில் உள்ள பதார்த்தங்கள் தலைவலியை தூண்டும் ஹார்மோன்களுக்கு உதவியாக இருக்கும். இதனால் தலைவலி ஏற்படும்.
உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் தேநீர் அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
YOU MAY LIKE THIS VIDEO
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
