ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்த வெளிநாட்டு பெண்
ஆஸ்திரேலியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஒரே இரவில் தங்கள் குடும்பத்தின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதாகவும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது இவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது, இதனால் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் இணையவழி நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
அதாவது அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பாக அழைத்து சென்றுவர வாகனம் ஒன்று தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

10 இருக்கைகள் கொண்டு வாகனம் வாங்குவதற்காக பிரசாரத்தை தொடங்கியுள்ளனர், நான்கு பெண் குழந்தைகள் பிறந்தது வரப்பிரசாதம் என்ற போதிலும் நிதிச்சுமையும் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதை தாண்டி போக்குவரத்து வசதியும் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
பிபிசி செய்தியின் படி, பச்சிளம் குழந்தைகளை பராமரிக்க நண்பர்களும் ஆதரவாளர்களும் துணையாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
சமூகவலைத்தளங்களில் பலரும் பெற்றோருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.