மிகப்பெரிய பொருளை விழுங்கிய மலைப்பாம்பு - உள்ளே இருந்ததை கண்டு ஆடிப்போன மருத்துவர்கள்; பதபதைக்க வைக்கும் வீடியோ!
இன்றைய நவீன உலகத்தில் விலங்குகளை குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, சில ரசிக்கும் விதமாகவும், சில சிந்திக்கும் விதமாகவும், பல ஆச்சர்யபட கூடிய அளவுக்கும் உள்ளன.
அந்த வகையில், குறிப்பிட்ட வீடியோ காட்சி ஒன்று காண்போரை கதிகலங்க வைத்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நியூ சவுஸ் வேல்ஸில் உள்ள மருத்துவமை ஒன்றில், மலைப்பாம்பு ஒன்று ஏதோ ஒரு பெரிய பொருளை விழுங்கி இருக்கிறது.

அது என்னவென்று தெரிந்துகொள்ளவும், பத்திரமாக அதை அகற்றவும் மருத்துவர்கள் நீண்ட நேரம் போராடுகின்றனர்.
பின், பாம்பின் வாயிலிருந்து மருத்துவ உபகரணங்களை கொண்டு அகற்றும்போது பெரிய பீச் டவல் ஒன்றை எடுத்துள்ளனர்.
இதைக்கண்டு மருத்துவர்கள் ஆடிப்போயுள்ளனர். வைரலாகவும் இந்த வீடியோ பரவி வருகிறது.
OMG pic.twitter.com/RakbsYi8ZX
— Figen (@TheFigen) July 28, 2022