Viral Video: மைதானத்தில் மோதிக் கொண்ட விராட் கோலி - ஸ்டாய்னிஸ்
நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டி ஆட்டத்தில் மைதானத்தில் விராட் கோலி - ஸ்டாய்னிஸ் மோதிக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
நேற்று 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மதியம் 1.30 மணியிலிருந்து நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன் எடுத்தது.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
மோதிக் கொண்ட விராட் கோலி - ஸ்டாய்னிஸ்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 21வது ஓவரில் பந்துவீசி விட்டு சென்ற மார்கஸ் ஸ்டாய்னிஸ், மறுமுனையில் நின்று கொண்டிருந்த கோலி, பேட்டிங் செய்து கொண்டிருந்த கே.எல் ராகுலை நோக்கி வந்துக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டனர். இதைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர்.
அப்போது, ஸ்டாய்னிஸ் சிரிப்புடனே நடந்து சென்றார். விராட் கோலியும், ஸ்டாய்னிஸ் இருவரும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியில் இணைந்து விளையாடினர்.
இதனால், இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு உள்ளதால் வேண்டுமென்றே இருவரும் மோதி கொண்டதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Clash between virat stoinis..#ViratKohli #stoinis #INDvsAUS3rdodi #IND pic.twitter.com/35HwYeNCJJ
— Chokka Chandu (@Chokka_Chandu) March 22, 2023