gold rate : நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி: தங்கம் விலை அதிரடியாக சரிவு!
today Gold and silver price :ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வரும் நிலையில், இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நேற்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து. ரூ.1,14,320 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று 22 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.11,985 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.95,880 ஆகவும் உள்ளது.

இதனிடையே, வெள்ளி விலையும் இன்று ரூ.5 குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |