தங்கம் விலை புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்வு
ஆகஸ்ட் 11 ஆம் தேதி சந்தை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், நேற்று (ஆகஸ்ட் 10) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,950க்கும், ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனையானது.இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய விலை விபரம்
22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.14,250க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ.1,14,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலையும் ஒரு கிராமுக்கு ரூ.235 அதிகரித்து ரூ.12,000க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,880 உயர்ந்து ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.260க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |