ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ
இயக்குனர் அட்லீ தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குனர் அட்லி
அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் அடுத்தடுத்து மாஸ் படஙகளை கொடுத்து வருகின்றார்.
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் சில படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் அட்லி.
அட்லீ இயக்கத்தில் உருவாகிய முதல் திரைப்படமான ராஜா ராணி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
முதல் படமே மாபெரும் ஹிட் கொடுத்ததால், அடுத்து தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என எடுத்தப்படங்கள் எல்லா திரைப்படங்களுமே ஹிட் அடித்தது மட்டுமன்றி வசூலையும் வாரிக்குவித்தது.
அதனை தொடர்ந்து பொலிவூட் சூப்பர் ஸ்டார் சாருக்கான், நயன்தாராவை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 க்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் வருண் தவான் நடிப்பில் அண்மையில் வெளியான பேபி ஜான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி தான் தயாரித்திருந்தார். இந்த திரைப்படத்துக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது.
பேபி ஜான் திரைப்படம் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தின் ஹிந்தி ரீ மேக் என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி 2014ஆம் ஆண்டு துணை நடிகையாக நடித்த கிருஷ்ண பிரியாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு மீர் என்ற ஆண் குழந்தையொன்றும் உள்ளது. சினிமாவில் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் தனது காதல் மனைவி மற்றும் குழந்தை தான் தன்னுடைய உலகம் என பல பேட்டிகளிலும் வெளிப்படைய கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் தனது குழந்தையின் பிறந்த நாளுக்கு ஒற்றை புகைப்படத்துடன் வாழ்த்து கூறி தற்போது அட்லீ தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |