அட்லீக்கு இப்படியொரு பக்கம் உள்ளதா? மனைவியே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
இயக்குநர் அட்லி குறித்து அவரின் மனைவி பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
இயக்குநர் அட்லீ
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் அட்லீ.
இவர் கோலிவுட் ரசிகர்களுக்காக ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் படத்தைத் தொடர்ந்துபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த திரைப்படம் நினைத்து பார்க்க முடியாத வெற்றியை தேடி கொடுத்தது.
அத்துடன் படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, யோகிபாபு, இந்த சேதுபதி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
அட்லீக்கு இப்படியொரு பக்கம் உள்ளதா?
இந்த நிலையில் அட்லீ குறித்து ப்ரியா சமிபத்தில் பேட்டியொன்றில் புகழ்ந்து பேசியுள்ளார்.
அதாவது, “ அட்லீ என் மீதும், மகன் மீதும் அதிகம் பாசம் கொண்டவர். இவருடைய வாழ்க்கையில் எனக்கும் மீருக்கும் பெரிய பங்கு உள்ளது.
எனக்கு மிகவும் சர்போர்ட்டாக இருப்பார். மீர் பிறந்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி கொடுத்தது.
அத்துடன் அவர்களுடைய அம்மா, அப்பாவிற்கு நல்ல மகன். அட்லீ மிக சிறந்த கணவராக நடந்து கொள்கிறார். மகனுக்கும் எனக்கும் என்னென்ன தேவையோ அது அனைத்தையும் வாங்கி தருகிறார். அவர் ஒரு சிறந்த அப்பா, கணவர், மகன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...” என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ப்ரியா பேசியதை கேட்ட இணையவாசிகள், “ எங்களுக்கு இப்படியொரு கணவர் கிடைத்தால் சொர்க்கம்...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |