உலகின் கடைசி சாலை எங்க இருக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே எந்த ஒரு விடயத்துக்கும் தொடக்கம் என்று ஒன்று இருந்தால், முடிவும் நிச்சயம் இருக்கும். ஆனால் ஆதியும் அந்தமும் இல்லாத விடயங்களை முடிவிலி என்று குறிப்பிடுவார்கள்.
அந்தவகையில் எல்லைகளை கணிக்க முடியாத இந்த பிரபஞ்பஞ்சத்தின் ஒரு சிறிய துண்டமான பூமியில் தான் நாம் வசிக்கின்றோம்.
7 கண்டங்களையும் 5 சமூத்திரங்களையும் உள்ளடக்கியுள்ள இந்த பூமியில் ஏராளமான பாதைகள் இருக்கின்றது என்பது நமக்கு தெரியும்.
எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்றாலும் அதற்கு நிச்சயம் ஒரு பாதை இருக்கும். ஆனால் உலகில் பாதைகள் எல்லாம் முடிவடையும் ஒரு இடம் உள்ளதாக என்பது பற்றி எப்போதாவது சிந்தித்ததுண்டா?
உலகின் கடைசி சாலை எங்குள்ளது இது ஏன் இறுதி சாலை என குறிப்பிடப்படுகின்றது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கடைசி சாலை
உலகின் இறுதி சாலையாக ஐரோப்பாவில் உள்ள E- 69 நெடுஞ்சாலை குறிப்பிடப்படுகின்றது. இது நார்வேயில் அமைந்துள்ளது.
அது உலகின் இறுதி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அரிய இடத்தைக் காண ஏராளமான பயணியர் வருகை தருகின்றனர். நார்வேயில் உள்ள இந்த E- 69 நெடுஞ்சாலையில் ஒரு முறையாவது நடந்து பார்க்க வேண்டும் என்பது பெரும் பாலானவர்களின் விருப்பமாகவுள்ளது.
வடக்கு ஐரோப்பாவிலுள்ள Norkapp ஐ நார்வேயி Oldefevoordல் உள்ள ஒரு கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டுள்ளதுடன், பூமத்திய ரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளமை குறிப்பிடதக்க விடயமாகும்.
நார்த் கேப் 6.9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இந்த நார்த் கேப் சுரங்க பாதையானது கடல் மட்டத்திலிருந்து 212 மீட்டர் கீழே காணப்படுகின்றது. முடிந்த வரை வட துருவத்துக்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலையான இது அறியப்படுவதன் காரணமாக இதனை பூமியின் கடைசி சாலை என குறிப்பிடுகின்றார்கள்.
இந்த சாலையில் பயணம் செய்ய விதிமுறைகள் பின்பற்றப்படுவது கட்டாயமாகும். ஒருவேளை நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் உங்களால் அந்த வழியில் செல்ல முடியாது.என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
