Tulsi: துளசி செடியினை யாரெல்லாம் வணங்கக்கூடாது? துரதிர்ஷ்டம் ஏற்படுமாம்
இந்து மதத்தில் புனிதமாக பார்க்கப்படும் துளசி செடியினை யாரெல்லாம் வணங்கக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
துளசி
இந்து மத சாஸ்திரப்படி துளசி செடிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. ஆயுர்வேதத்திலும் துளசி ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகவும் கருந்தப்படுகிறது.
துளசி செடியை கவனமாக வீட்டில் வளர்த்து வந்தாலும் கால நிலை மாற்றத்தினால் வாடி அழுக ஆரம்பித்துவிடும்.
குறிப்பாக, கோடை மற்றும் குளிர்காலங்களில் செடி வறண்டு போகக்கூடும். ஆனால் துளசி செடியினை நீங்கள் பராமரிப்பதைக் கொண்டு உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.
துளசி செடியை சரியான திரைசயில் வைப்பது அவசியமாகும். இது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றது. ஆனால் துளசி செடியினை சில பெண்கள் வணங்கக்கூடாது என்று கூறப்படுகின்றது. அதுகுறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் வணங்கக்கூடாது?
துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாகக் கருதப்படுகின்றது. மேலும் இதை வழிபட்டால் நேர்மறை ஆற்றல் நிலைத்து இருக்கும்.
ஜோதிடத்தின் படி, துளசி செடியை வழிப்படுவதற்கென சில விதிகள் உள்ளன. இதை வழிபடவில்லை என்றால் அபசகுணமான விளைவுகள் ஏற்படும்.
துளசி செடியை சில பெண்கள் வழிபடக்கூடாது என்று சொல்லப்படுகின்றது. அதாவது மாதவிடாய் இருக்கும் சமயத்தில் பெண்கள் துளசி செடியை வணங்கக்கூடாது என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது அசுபமானது.
துளசிக்கு செடிக்கு தண்ணீர் ஊற்றாத பெண்கள் ஒருபோதும் அதை வணங்கக்கூடாது.
ஜோதிடத்தின் படி, குளிக்காமல் அசுத்தமாக இருக்கும் பெண்கள் துளசி செடியை வணங்கக்கூடாது. அது அசுபமாகக் கருதப்படுகின்றது.
தவறான எண்ணம் உள்ள பெண்கள் துளசி செடியை வணங்கினால் வழிபட்டதற்கான பலன் கிடைப்பதில்லை என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |