உங்களை பற்றி உங்கள் பாதம் சொல்லும் ரகசியம்: நீங்கள் எப்படிப்பட்டவர் ?
நமது உடலில் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு வகையாக இருக்கும். எல்லாம் ஒரே தாதிரி இருக்காது. இதை வைத்து நமது குணவியல்புகளை கணிக்க முடியும்.
நமது ஆளுமையும் வித்தியாசப்படும். நமது உடல் பாகங்களிக் அமைப்பிற்கு நம்முடைய ஆளுமை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் ஒளிந்துள்ளன.
அதில் ஒரு வகைதான் இந்த கால் பாதங்களினட வடிவம். இது ஒவ்வொருவருக்கும் வவிதவிதமாக இருக்கும். இதை பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உங்களைப் பற்றி கூறும் உங்கள் கால் பாதம்
- நம்முடைய குணாதிசயங்களுக்கும், கால் பாதங்களின் வடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பல ஆய்வுகள் உறுதியாக கூறுகின்றன.
- பாதங்களின் வளைவுகளிலிருந்து, கால் விரல்களின் வடிவம் வரை, நம்முடைய ஆளுமை குறித்த பல நுணுக்கமான தகவல்கள் ஒளிந்துள்ளன.
- உங்கள் கால் பாதம் சதுர வடிவத்திலும், அனைத்து கால் விரல்களும் ஒரே அளவிலும் இருக்கும்.
- இப்படி இருந்தால் நீங்கள் யதார்த்தமும், நம்பகத்தன்மையும் நிறைந்தவர். நேரத்தையும், உங்களிடம் இருக்கும் திறமைகளையும் சரியாக பயன்படுத்தும் திறன் கொண்டவர்.
- கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவராக இருப்பீர்கள். மற்றவர்களோடு சகஜமாக பழகக் கூடியவராக இருப்பதால், எளிதாக நண்பர்கள் கிடைப்பார்கள்.
- உங்கள் காலின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்கள் ஒரே உயரத்திலும், நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் இறங்குமுகத்திலும் இருக்கும்.
- இதனை ரோமன் பாதம் என அழைப்பார்கள்.
- இந்த வடிவத்தில் உள்ள நீங்கள் அன்புள்ளம் கொண்டவராகவும் அடுத்தவர்களோடு எளிதாக பழகக் கூடியவராகவும் இருப்பீர்கள்.
- புதிய மனிதர்களை சந்திக்கவும், அவர்களோடு உறவுமுறையை வளர்த்துக்கொள்ளவும் ஒருபோதும் தயங்க மாட்டீர்கள்.
- உங்களின் படைபலம் மிகப்பெரியது. உங்கள் கருத்தை தன்னம்பிக்கையோடும், உறுதியாகவும் மற்றவர்களிடம் கூறுவீர்கள்.
- உங்களின் பெருவிரல் நீளமாகவும், அதனை தொடர்ந்துள்ள விரல்கள் 45 டிகிரி கோணத்தில் இறங்கு வரிசையிலும் இருக்கும்.
- அதற்கு எகிப்திய பாதம் எனப் பெயர்.
- இந்த பாதம் உள்ள நீங்கள் சுயமாக யோசிக்க கூடியவராக இருப்பீர்கள்.
- உங்களிடம் பிடிவாத குணம் இருந்தாலும் படைப்பாற்றல் அதிகமாக இருக்கும்.
- அடுத்தவர்களை உங்கள் வழிக்கு ஒத்துக்கொள்ள வைப்பதில் சாமர்த்தியமானவர்.
- மற்றவர்களின் ரகசியங்களை பேணிக் காப்பதால் நம்பகமான மனிதராக இருப்பீர்கள்.
- உங்கள் பெருவிரலை விட இரண்டாம் விரல் நீளமாக இருந்தால், அதை கிரேக்க பாதம் என அழைப்பார்கள்.
- இதை நெருப்பு பாத வடிவம் என்றும் அழைப்பதுண்டு.
- இதற்கு காரணம் படைப்பாற்றலும், உணர்ச்சிமிக்கவருமான நீங்கள் உள்ளுணர்வோடு இயங்குபவராக இருப்பீர்கள்.
- சாகச குணம் உங்கள் இயல்பிலேயே இருக்கும். புதிய சவால்களை ஆர்வத்தோடு எதிர்கொள்வீர்கள்.
- யாருக்கும் பயப்பட மாட்டீர்கள் பல வித்தியாசமான வழிகளில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ள முயல்வீர்கள். அதில் வெற்றியும் உங்களை தேடி வரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)