திருமண உறவில் பிரச்சினை இருந்தால்... பரிகாரம் செய்யலாமா? DNA ஜோதிடர் விஷால் நேர்காணல்
திருமண உறவில் பிரச்சினை இருந்தால், பரிகாரம் செய்யலாமா? என்று DNA ஜோதிடர் விஷால் நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நேர்காணல் பொதுவான ஜோதிட அணுகுமுறை எப்படி இருக்கும் என்றால், ஜாதகத்தை வைத்து நமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை கணிப்பதற்காக முயற்சி செய்வார்கள்.
இந்த ஜோதிடத்திற்கும், மரபணு ஜோதிடத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்றால், முதலில் நம்ம ஜாதகத்தை வைத்து நம் தலையில் என்ன எழுதப்பட்டிருக்கிறது அல்லது நமக்கு என்ன நடக்கும்.
இந்த எண்ணங்களை தூக்கிப்போட்டால்தான் நீங்க மரபணு ஜோதிடத்திற்குள்ளேயே இறங்க முடியும். நடந்து முடிந்த விஷயத்திற்கு நீங்கள் கடவுள் கிட்டயே போனால்கூட தீர்வு கிடையாது. ஏன் என்றால் அது இறந்த காலம்.
ஒருத்தருக்கு விவாகரத்து வரைக்கும் விஷயம் போய்விட்டது. ஒருவேளை அவங்க விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் அடுத்த திருமணத்திற்கு தயாராகும்போது அதற்கு வேண்டுமென்றால் ஜாதகத்தை பார்க்கலாம்.
இது தொடர்பான மேலும் தகவல் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்....