துர்ஷ்ட சக்தி கோவிலுக்கு வெளியே ஓரமாய் நிற்கும் - அகோரி சாமுண்டி மலாய்கா நேர்காணல்
ஐபிசி பக்தி சேனலுக்கு அகோரி சாமுண்டி மலாய்கா நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் காளியம்மன் குறித்தும், துர்ஷ்ட சக்திகள் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
மூகாம்பிகை அம்மனுக்கு இணையா எதுவும் கிடையாது. உலகத்திலேயே ஒரே ஒரு கோவிலில்தான் 365 நாட்களிலும் யாகம் நடந்துக் கொண்டிருக்கும். அதுதான் தாய் மூகாம்பிகை கோவில். ஒரு ஜாதகத்தில் ஒரு தோஷம் இருக்கிறது.
ஒரு ஜாதகத்தில் ஒரு கண்டம் இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் நேரம் சரியில்லையென்றால் இதற்கு பரிகாரம் இருக்கும். கோவில் போய் விளக்கு ஏற்ற வேண்டும். ராகு, கேதுவிற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது.
இதே பேய், சூனியன், பில்லி, சூனியம் எதுவும் பரிகாரத்திற்கு கட்டுப்படாது. கோவிலுக்கு போய்ட்டு வந்தாலும், துர்ஷ்ட சக்தி கோவிலுக்கு வெளியே ஓரமாய் நின்றுவிடும். திருப்பி வீட்டிற்கு வரும்போது அது உன் கூடவே வந்துவிடும்.
அதற்காகத்தான் இந்த யாகம். சண்டிகா யாகத்தில் அந்த காலத்தில் உயிர் பலி கொடுத்துதான் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக மேலும் தகவல் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்...