யாரெல்லாம் தங்க நகை அணியலாம்! எந்த ராசியெல்லாம் தொடக்கூட கூடாது?
By Nivetha
தங்கம் நகைகள் மீது சமூகத்தில் ஒருவகை ஈர்ப்பு எப்போதும் இருக்கிறது.
நாம் வணங்கக்கூடிய தெய்வங்களுக்கு கூட தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளோம்.
தங்கம் மகாலட்சுமியின் அம்சமாகவும், விலைமதிப்பற்ற உலோகமாக பார்க்கப்படும். தங்க நகை அணிவது சில ராசிகளுக்கு சிறப்பான அதிர்ஷ்டத்தைத் தரும் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறது.
அதே போல சில ராசிகளுக்கு தங்க நகை அணிவது அவ்வளவாக நல்லதல்ல எனவும் குறிப்பிடப்படுகிறது.
தங்க நகை எந்த ராசிக்கு யோகம் தரும்?
மேஷம்
மேஷ ராசியினர் தங்க மோதிரத்தை அணிவதால் தைரியம், நேர்மறை சக்தி அதிகரிக்கிறது. ஒவ்வொரு துறையிலும் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கிறது.
அதே நேரத்தில், அதிர்ஷ்டமும் சாதகமாகும். இதன் காரணமாக உங்கள் எல்லா வேலைகளும் எளிதாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுப்படும்.தங்க மோதிரத்தை அணிவதன் மூலம், பழைய கடன்களை படிப்படியாக அகற்றுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் தங்க ஆபரணங்களை அணிவது அதிர்ஷ்டத்தைத் தருகிறது. தங்கம் நகை அணிவதால் சிம்ம ராசியின் அதிபதி சூரியனும், தங்கத்தின் காரணியான வியாழன் கிரகத்துடன் நட்பு உறவை அதிகரிக்கும்.
எனவே, சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் தங்கம் அணிவது ஆற்றலையும் உற்சாகத்தையும் அதிகரிக்கிறது. இதனால் அனைத்து பணிகளையும் எளிதாக முடிக்க முடிகிறது.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் தங்க மோதிரத்தை அணிந்தால், படிப்படியாக அவர்களின் ஆசைகள் நிறைவேற ஆரம்பித்து, செழிப்புடன் வாழலாம்.
தங்க மோதிரத்தை அணிய விருப்பமில்லை எனில் குறைந்தபட்சம் நீங்கள் ஒரு சங்கிலி அல்லது வளையலை, காப்பு அணியலாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை, குரு ஏழாவது மற்றும் ஐந்தாவது வீட்டின் அதிபதி, இதன் காரணமாக குருவுக்கு உரிய தங்க ஆபரணங்களை அணிந்து நல்ல பலனைத் தருகிறது.
தனுசு
தங்க மோதிரம் அணிவது தனுசு மக்களுக்கு நல்ல பலனைத் தருகிறது. நீங்கள் செய்யக்கூடிய வேலை விரைவாக நிறைவடைகின்றன. தனுசின் அதிபதி குரு, தங்கத்தின் காரணியாகக் கருதப்படுகிறது.
எனவே தங்க ஆபரணங்களை அணிவதால் உங்கள் ராசி நாதனான குரு கிரகத்தை பலப்படுத்துகிறது. அதன் சுப பலன்கள் காரணமாக பணம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள், வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
[BBOT5M
]
யாரெல்லாம் தங்கத்தை அணியக்கூடாது?
ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்த நபர்கள் தங்க நகைகளை அணிவது நல்லதல்ல.
மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசியினர் குறைந்தபட்சம் தங்கத்தை அணிய வேண்டும்.
இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான பணியை செய்பவர்கள் தங்க நகை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இவை இரண்டும் சனியுடனான வணிக உறவு கொண்டது. எனவே தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

mint chutney: முகப்பருக்களுக்கு முடிவுக்கட்டும் புதினா சட்னி... 18 நிமிடங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US