மறந்தும் கூட தானம் கொடுக்கக்கூடாத பொருட்கள்! பிரச்சினை வரிசைகட்டி வரும் ஜாக்கிரதை
not donate things astrology
not donate old things
By Manchu
தானம் என்பது மிகவும் முக்கியமாக இந்து சமயத்தில் மட்டுமின்றி அனைத்து சமயத்திலும் காணப்படுகின்றது. ஏழைகளுக்கு உதவி செய்பவர் கடவுளுக்கு உதவி செய்வதாகவே பார்க்கப்படுகின்றது.
ஆனால் தானம் செய்வதிலும் சில விதிமுறைகள் இருக்கின்றது. எப்பொழுது தானம் செய்ய வேண்டும், எதை தானம் செய்யக்கூடாது என்று தர்ம புராணங்களிலும், ஜோதிடத்திலும் கூறப்பட்டுள்ளது.
தானமாக மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாத பொருட்கள்
- எஃகு பாத்திரங்களையும், நாம் பயன்படுத்திய பாத்திரங்களையும் அடுத்தவர்களுக்கு தானமாக வழங்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் குறைந்துவிடும். ஆகவே தானம் கொடுக்க வேண்டும் என்றால் புதிய பாத்திரங்களை மட்டும் கொடுங்கள்.
- பிளாஸ்டிக் பொருட்களை மறந்தும் தானமாக வழங்கிவிடாதீர்கள். அது உங்களின் வியாபாரத்தில் மோசமான விளைவினை ஏற்படுத்தும் ஜாக்கிரதை.
- கத்தி, ஊசி, கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை தானமாக கொடுத்தால் வீட்டில் அமைதி நீங்கி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுவிடும்.
- வீட்டை சுத்தப்படுத்தும் விளக்குமாறு ஒருபோதும் தானமாக கொடுக்கக்கூடாது. அவ்வாறு கொடுத்தால் அது வறுமையை நீங்களாவே அழைப்பதற்கு சமம்.
- நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் மீதியான உணவு, அழுகிய மற்றும் பழுதடைந்த உணவுகள், பயன்படுத்திய எண்ணெய் இவற்றினை யாருக்கும் தானமாக வழங்கிவிடாதீர்கள். இது அசுபமான செயலாகுமாம்.
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US