விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறனுமா? இந்த மஞ்சள் பரிகாரத்தை செய்து பாருங்க
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் மிகவும் புண்ணியம் நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் விஷ்ணு பகவானுக்க உகந்ததாக கருதப்படுகின்றது.
இம்மாதத்தில் தானம், விரதம் என்பவற்றின் மூலம் மனிதர்கள் சகல பாவங்களையும் போக்கலாம் என இந்துக்களால் நம்பப்படுகின்றது.
இந்த மாதம் தவம் மற்றும் விரதத்துக்கான மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் முழு மனதுடன் இறைவனை வழிபட வேண்டும்.
உங்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற இம்மாதத்தில் மஞ்சளை கொண்டு பரிகாரம் செய்வது விசேஷமானதாக கருதப்படுகின்றது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிட பரிகாரம்
கடினமாக உழைத்தும் உங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால், கார்த்திகை மாதத்தில் விஷ்ணுவுக்கு மஞ்சள் முடிச்சு மாலையை சமர்ப்பிக்கவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் வேலையில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி உங்களின் உழைப்பின் முழு பலனையும் பெறலாம்.
மஞ்சள் கட்டியை சிவப்பு துணியில் கட்டி பத்திரமாக வைத்து தினமும் வழிபடவும். இதைச் செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் உங்கள் மீது இருக்கும். மேலும் நீங்கள் ஒருபோதும் நிதி இழப்பைச் சந்திக்க வேண்டியதில்லை.
கடன் தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் எப்போதும் சந்திக்க நேரிட்டால், அரிசியை மஞ்சளில் கலந்து அவற்றை ஒரு சிவப்பு துணியில் கட்டி உங்கள் பணப்பையில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் கடனில் இருந்து விடுபடுவதுடன் அதிர்ஷ்டம் கிட்டும் என்பது நம்பிக்கை.
வியாழன் அன்று பருப்பு மற்றும் மஞ்சள் தானம் செய்து, லட்சுமி தேவியின் சிலைக்கு முன் தினமும் ஒரு சிட்டிகை மஞ்சளை சமர்பிக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் விரும்பிய வாழ்க்கை துணையை பெறலாம் மற்றும் உங்கள் திருமண வாழ்க்கையில் வரும் தடைகளும் நீங்கும் என்பது ஐதீகம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |