நடிகரின் கார் மோதியதில் துணை இயக்குனர் மரணம்!
துணை நடிகரின் கார் மோதியதில் இயக்குனர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய இயக்குனர்
மதுரவாயல், தனலட்சுமி தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ்(26). இயக்குனர் வெற்றிமாறனிடம் துணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டே வடசென்னை, அசுரன் படங்களில் துணை நடிகராக சில காட்சியில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில், கே.கே.நகர் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, வேகமாக வந்த கார் சரண்ராஜ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்பு சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சரண்ராஜின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பொலிசாரின் விசாரனையில், விபத்தை ஏற்படுத்தியவர் சாலிகிராமம் எம்.சி.அவென்யூ பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் (41) என்பதும், அவரும் சினிமாவில் துணை நடிகராக இருப்பதும் தெரியவந்துள்ளது.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான பழனியப்பன், நேற்று அதிக போதையில் இருந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.