படுத்தவுடன் தூக்கம் வரணுமா? இரவு உணவை இப்படி சாப்பிடுங்க
மனிதர்களுக்கு இருக்கக்கூடிய தூக்கமின்மை பிரச்சனைக்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்த்து அதற்கான ஒரு நல்ல வழிமுறையையும் தெரிந்து கொள்ளலாம்.
படுத்தவுடன் தூக்கம் வர
ஒரு மனிதன் 8 மணி நேரத்திற்கு ஒரு நாளைக்கு உறங்க வேண்டும். நமது மூளை நாள் முழுக்க வேலை செய்து களைப்படைந்து இருக்கும்.
இதை திரும்பவும் உட்சாகப்படுத்த நாம் கண்டிப்பாக அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். சிலர் தூக்கம் வராமல் மிகவும் சிரமப்படுவார்கள் இதற்கு நாம் உண்ணும் உணவும் ஒரு காரணமாகின்றன.
இரவில் தூங்க முன் மிதமான சூட்டில் பால் குடிப்பது இரவில் ஆழ்ந்த உறக்கம் வருவதற்கு வழிவகுக்கும் என்று பிரபல ஆயுர்வேத மருத்துவர் கூறியுள்ளார்.
இளநீரை பருகுவதன் மூலம் மன அழுத்தங்கள் குறையும். இதனால் படுத்த உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு அழைத்து செல்ல உதவும்.
வாழைப்பழத்தில் மேக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களோடு டிரிபொடோன் என்ற அமினோ அமிலம் உள்ளது.
இதனுடன் பால் மறும் சிறிதளவு சர்க்கரை அதோடு கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டால், சாப்பிடுவதற்கு ருசியாக இருப்பதோடு உடலுக்கு நல்லது பாதாம், குங்குமப்பூ பாதாம் பாலில் அபரிமிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இது மன அழுத்தம் டென்ஷனை குறைக்க கூடியது. சூடான அல்லது குளிர்ந்த பாதாம் பாலில் சிறிய அளவு குங்குமப்பூ கலந்து குடிக்க்கலாம். இந்த உணவுமுறையை பின்பற்றினால் உடல் மிகவும் ஆராக்கியமாக இருப்பதோடு நல்ல தூக்கத்தையும் தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |