யூரிக் அமில பிரச்சினை உள்ளதா? அப்போ இந்த காய்கறியை எடுத்துக்காதீங்க
யூரிக் அமில பிரச்சினையில் இருப்பவர்கள் மறந்து கூட இந்த மூன்று காய்கறிகளை சாப்பிடக்கூடாது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
யூரிக் அமிலம்
யூரிக் அமிலம் பியூரின் எனப்படும் புரதத்திலிருந்து உடலில் உருவாகின்றது. சில உணவுகளில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் அபாயம் இருக்கின்றது.
அதிக யூரிக் அமிலம் உடலில் உற்பத்தியாகும் கழிவுப் பொருள். உடலில் அதன் அளவு அதிகரித்தால், மூட்டு வலி, விரல்கள் மற்றும் எலும்புகளில் வீக்கம் என பல கடுமையான பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
யூரிக் அமிலம் பொதுவாக சிறுநீர் மூலம் வடிகட்டப்படுகின்றது. ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், மோசமான வாழ்க்கை இந்த காரணங்களால் அதிகரிக்க தொடங்குகின்றது. ரத்தத்தில் இந்த யூரிக் அமிலம் சேரத் தொடங்கும்.
நீங்கள் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், மறந்து கூட இந்த காய்கறிகளை உட்கொள்ள வேண்டாம்.
உட்கொள்ளக்கூடாத காய்கறிகள்
பச்சை காய்கறியான ப்ரோக்கோலி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், அதிய யூரிக் அமிலம் இருந்தால் ப்ரோக்கோலியை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
காளான் உட்கொள்வதும் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்குமாம். ஆம் காளானில் பியூரின் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால், யூரிக் அமிலம் அதிகரித்து உடம்பிற்கு தீமை ஏற்படலாம்.
உங்களுக்கு அதிக யூரிக் அமில பிரச்சனை இருந்தால் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். யூரிக் அமிலம் பிரச்சனை உள்ளவர்கள் கீரை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |