காட்டுத்தீயாய் பரவிய விவாகரத்து சர்ச்சை... ஒருவழியாக உண்மையை உடைத்த நடிகை அசின்
நடிகை அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்வதாக வெளியான தகவலுக்கு பதில் அளித்துள்ளார்.
நடிகை அசின்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்த அசின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் கேரள பெண்ணாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்திருந்தார். பின்பு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து வெற்றியானது. வெறும் இரண்டு ஆண்டுகளில் முன்னனி நடிகை என்ற பெயரை பெற்றார்.
பல முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்த இவர், பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததால் அங்கு நடித்துவந்தார். பின்பு கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அரின் என்று பெயர் வைத்துள்ளனர்.
தற்போது கணவர் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அதனால் அவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசிப்பதாகவும், விவாகரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் ஒன்று நேற்று காட்டுத்தீயாய் பரவியது.
அசின் அளித்த பதில்
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அசின் கூறியிருப்பது, கோடை விடுமுறையை கழித்து வரும் இத்தருணத்தில் கற்பனையான அடிப்படை ஆதரமற்ற செய்திகள் இவ்வாறு உலா வருகின்றது.
இந்த வதந்தியை பார்த்த போது திருமணத்திற்கு முன்பு நடந்த சம்பவம் நினைவிற்கு வருவதாக கூறியுள்ளார். ஆம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற தருணத்தில், அசின் மற்றும் ராகுல் சர்மா இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது என்று செய்தி வெளியாகி சிரிப்பை ஏற்படுத்தியதாம்.
இந்த கோடைவிடுமுறையில் இந்த விடயத்தினால் தன்னுடைய 5 நிமிடங்கள் வீணாகியுள்ளது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.... அடுத்து இதைவிட நல்லதா பண்ணுங்க என்று விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |