கணவரை விவாகரத்து செய்யும் நடிகை அசின்... வாழ்க்கையில் நடந்த துரோகம் என்ன?
நடிகை அசின், தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை அசின்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம்வந்த அசின், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இப்படத்தில் கேரள பெண்ணாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்திருந்தார். பின்பு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்த நிலையில், அவர் நடித்த படங்களும் அடுத்தடுத்து வெற்றியானது. வெறும் இரண்டு ஆண்டுகளில் முன்னனி நடிகை என்ற பெயரை பெற்றார்.
பல முன்னனி நடிகர்களுடன் அடுத்தடுத்து படங்களில் நடித்த இவர், பாலிவுட் வாய்ப்பு கிடைத்ததால் அங்கு நடித்துவந்தார். பின்பு கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து, சினிமாவை விட்டு விலகினார். இந்த தம்பதிகளுக்கு 2017ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அரின் என்று பெயர் வைத்துள்ளனர்.
விவாகரத்து செய்வது ஏன்?
இந்த தம்பதிகள் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவந்த நிலையில், தற்போது விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ராகுல் சர்மாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாகவும், இதனை அசின் பலமுறை கண்டித்தும் கேட்காததால் தற்போது விவாகரத்து வரை இந்த பிரச்சினை சென்றுள்ளது.
தற்போது அசின் தனது குழந்தையுடன் கணவருடன் வசிக்காமல், தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |