40 கதை அஸ்வின் குமார் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் அஸ்வின் குமார். இந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்பும் கிடைத்தது. என்ன சொல்ல போகிறாய் என்கிற படத்தில் நடித்தார் அஸ்வின்.
அதுவரை சமூக வலைதளங்களில் அன்பையும், ஆதரவையும் பெற்று வந்த அஸ்வின், கடந்த மாதம் நடந்த என்ன சொல்ல போகிறாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சால் கடும் எதிர்ப்பை சம்பாதித்தர்.
அதிலும், 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என அவர் பேசியதைக் கேட்டு கோலிவுட்டே கொந்தளித்தது. இதுவரை அந்த 40 கதை என்ற வார்த்தையை வைத்தே அஸ்வினை கலாய்த்து மீம்ஸ் வெளியாகி கொண்டிருக்கையில், தற்போது அடுத்த சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறார்.
அதன் படி சமீபத்தில் அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “பழிவாங்குவதற்கு எனக்கு மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கிறது.
எதுவா இருந்தாலும் கர்மா பார்த்துக்கொள்ளும்” என்ற வாசகம் எழுதி இருக்கிறார். அஸ்வினின் இந்த பதிவு எரியிற தீயில் எண்ணெயை ஊற்றுவதைபோல மேலும் நெட்டிசன்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்துவிட்டனர்.
