வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபலம்! தீவிர விசாரணையில் பொலிசார்
தெலுங்கு திரையுலகில் பேஷன் டிசைனராக இருந்த பிரபலம் பிரதியுஷா வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிசைனர் பிரதியுஷா கேரிமெல்லா
டிசைரான பிரதியுஷா கேரிமல்லா தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் பஞ்ஜாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இவர், குளியலறையில் நேற்று மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

அருகில் கிடந்த விஷபாட்டில்
அவரது அறையில் கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கொண்ட பாட்டில் ஒன்று கிடந்துள்ளது. அதனை அவர் சுவாசித்து இருக்க கூடும் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதனால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பிரதியுஷா மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார் என கூறியுள்ள பொலிசார், எனினும் விசாரணை நடந்து வரும் நிலையில் உண்மையான பின்னணி பின்பே வெளிவரும் என்று கூறப்படுகின்றது.

சமீபத்தில் அளித்த பேட்டி
பிரத்யுஷா அமெரிக்காவில் மாடலிங் படித்தவர். அவரது பெயரிலே 2013-ஆம் ஆண்டு முதல் அவர் பேஷன் டிசைனிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள், பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு பேஷன் டிசைனராக பிரத்யுஷா இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் எப்போதுமே ஃபேஷன் மீது விருப்பத்துடன் இருந்திருக்கிறேன்.
ஆனால் அதையே எனது தொழிலாக மாற்றவேண்டும் என நான் நினைக்கவில்லை. எனது நண்பர்கள் இதையே தொழிலாக மாற்றிக்கொள்ள வலியுறுத்தினார்கள் என தனது
சமீபத்திய பேட்டியில் பிரத்யுஷா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.