நம்ம அன்ப யாரும் புரிஞ்சுக்கல! அசலை நினைத்து குழந்தை போல் கதறி கதறி அழும் நிவா
பிக்பாஸ் வீட்டில் அசல் கோளாறு எலிமினேட் ஆனதை தாங்க முடியாமல் தனிமையில் நிவா கண்கலங்கி அழுது வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6, கடந்த சீசன்களை விடவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
வார இறுதியில் கமல்ஹாசன் போட்டியாளர்களை கண்டிக்கும் விதமும் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
முதல் வாரம் சாந்தி மாஸ்டர் எலிமினேட் ஆன நிலையில், கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.
முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட ஜிபி முத்து, குடும்பத்தை விட்டு இருக்கமுடியவில்லை எனக்கூறி வெளியேறினார்.
அத்துமீறிய அசல் கோளாறு
கடந்த வாரம் வெளியேறிய அசல் கோளாறு, பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வந்தார் என்ற விமர்சனங்களே வந்தது.
குயின்ஸி, மகேஸ்வரி, மைனா, ஜனனி என ஒவ்வொருவரின் கைகளை தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தார் என கூறப்பட்டது.
குறிப்பாக நிவாவும்- அசலும் நடந்து கொண்ட விதம் சற்றே முகம் சுளிக்க வைத்தது.
உருகும் நிவாஷினி
இந்நிலையில் அசல் வீட்டை விட்டு வெளியேறிய நாளிலிருந்து நிவா அழுது புலம்பி வருகிறார்.
ஏன்டா போன.. நீ இல்லாமல் என்னல..., நீ இல்லாமல் என்னல சாப்பிட முடியல.. தூங்க முடியலடா, மறக்க முடியல... இந்த 21 நாள்ல நான் காலையில் எழுந்ததும் உன் முகத்தைதான் பார்ப்பேன் என்று கேமராவைப் பார்த்த படி பேசி புலம்பி வருத்தப்பட்டு வருகிறார்.
இந்த வீட்டில் நிறைய பேர் இருக்காங்க, உன்னை ஏன் வெளிய அனுப்புனாங்க, நம்மளோட அன்ப யாரும் புரிஞ்சுக்கவே இல்ல.
உன் சட்டையை நான் எடுத்து வச்சிக்கிட்டேன், அதைத்தான் போட்டு இருக்கிறேன். வெளியில் வந்ததும், உன்னைப்பார்த்து இந்த சட்டையை வாஷ் பண்ணி தருவேன் என்று அழுது புலம்புகிறார்.