ஆர்யா, சாயிஷா ஜோடியின் மகளா இது? இவ்வளவு வளர்ந்துட்டாரா? முதல் முறை வெளியான அழகிய வீடியோ
நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடி முதல் முறை மகளை ரசிகர்களுக்கு அழகிய வீடியோ பதிவின் மூலம் காட்டியுள்ளனர்.
ஆர்யா மற்றும் சாயிஷா ஜோடி கடந்த 2019 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் சாயிஷா ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
முதல் முறை மகளை கட்டிய ஜோடி
திடீரென்று சாயிஷா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வந்தது. பிறகு ஜூலை மாதம் 23ஆம் திகதி இந்த தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியது.
எனினும், குழந்தை பிறந்த பிறகு ஒரு முறை கூட குழந்தையின் புகைப்படத்தினை சமூக ஊடகங்களில் சாயிஷா வெளியிட்டது இல்லை.
வைரலாகும் வீடியோ
இந்த நிலையில் முதல் முறையாக வீடியோ மூலம் குழந்தையை காட்டியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதில் குழந்தை சற்று நன்றாக வளர்ந்திருப்பது தெரிகின்றது.
முதல் முறையாக ரசிகர்களுக்கு மகளை கட்டிய சாயிஷா! pic.twitter.com/JZI3M7rAgK
— Bala (Journalist) (@balamedia_rj) December 4, 2022