50 வயதில் இப்படியொரு அழகா? அனிதா விஜயகுமாரின் கலக்கல் புகைப்படம்
நடிகர் அருண் விஜய்யின் அக்காவும், நடிகர் விஜயகுமாரின் மகளுமான அனிதாவின் நவராத்திரி கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகின்றது.
நடிகர் விஜயகுமார்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் விஜயகுமாரும் மஞ்சுளாவும்.
விஜயகுமாரும் அவரது முதல் தாரம் முத்துக்கண்ணுவிற்கும் பிறந்த குழந்தைகள் தான் கவிதா, அனிதா, அருண்விஜய் ஆகியோர்.
இதில் கவிதா, சரத்குமார் நடித்த கூலி திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார். அருண் விஜய் ஹீரோ வில்லன் என்று அசத்தி வருகின்றார்.
பின்பு விஜயகுமார் சக நடிகையான மஞ்சுளாவை முதல் மனைவியின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு, வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.
அனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் குடும்பத்தில் நடிக்காத ஒரே மகள் யார் என்றால் அது அனிதா மட்டுமே. இவர் மருத்துவராக இருக்கின்றார்.
கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
சமீபத்தில் இவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்தார்.
சமீப காலமாக விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அனிதா.
அந்த வகையில் தற்போது நவராத்திரியை கொண்டாடும் விதமாக தினசரி ஒரு நிறத்தில் புடவை அணிந்து அதனை போட்டோஷூட் நடத்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அது எந்த கடவுளை குறிக்கும் என்பதையும், அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டு வருகிறார், இது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |