போஸ்டர் அடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கமல் ரசிகர்கள்!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தோல்வியை தழுவியது.
கமல்ஹாசன் தனது கட்சியின் முக்கியத் தலைவர்களோடு நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது ஆலோசனை முடிந்து வெளியே வந்த முக்கியத் தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ் உட்பட முக்கியத் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

இந்நிலையில் மதுரையில் அவரது ரசிகர்களிடையே "அரசியல் வேண்டாம்... எனக்கு ஆசானே போதும்" "மாறாதையா மாறாது மக்கள் மனமும் குணமும் மாறாது" ''மாற்ற நினைத்தவர்கள் இங்கு தோற்றுப் போனதே சரித்திரம்.
ஐந்தில் வளையாதது தமிழகம் ஐம்பதில் வளையுமா?'' போன்ற வாசகங்களுடன் இந்தியன் 2 படத்தில் உள்ள புகைப்படத்துன் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.