மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த பழத்தை சாப்பிடுங்க
இன்று பலரின் மிகப்பெரிய பிரச்சினை மூட்டு வலி என்று கூறுகின்றனர். மூட்டுவலி எதனால் ஏற்படுகின்றது? வலியை போக்க பழங்கள் எவ்வாறு உதவி செய்கின்றது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக மனிதர்களின் உடல் உறுப்புகளை இயந்திரத்துடன் ஒப்பிட்டு பார்த்து புரிந்து கொள்ளலாம். இயந்திரம் ஒன்றில் பொருத்தப்பட்டிருக்கும் பொருட்கள் உராய்வினால் தேய்மானம் ஏற்பட்டு பின்பு அதனை புதிதாக மாற்ற வேண்டியுள்ளது.
இதைப் போன்றே மனிதர்களின் உறுப்பு காணப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எலும்பு, மூட்டுகளில் தேய்மானம் வராமல் இருப்பதற்கு திரவம் ஒன்று காணப்படுமாம். இவை வயதாக வயதாக குறைய தொடங்குவதினால் மூட்டுகளில் தேய்வு ஏற்பட்டு வலி ஏற்படும்.
மூட்டுகளில் ஏற்படும் நாள்பட்ட அழற்சியை ஆர்த்ரைட்டீஸ் என்றும் வாதம் என்று கூறப்படுகின்றது. நம் உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதன் மூலம் மூட்டு வலியை கட்டுக்குள் வைக்க முடியுமாம்.
யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் பழங்கள்
அதிகப்படியான நார்ச்சத்து கொண்ட ஆப்பிளில் அதிகப்படியான யூரிக் அமிலத்தை உறியும் திறன் உள்ளதாம். எனவே மூட்டு வலி இருப்பவர்கள் ஆப்பிளை எடுத்துக் கொள்ளலாம்.
இதே போன்று செர்ரி மற்றும் கிவி பழங்கள் யூரிக் அமிலத்தை உரியும் திறன் கொண்டதால் இந்த பழங்களை சாப்பிட்டாலும் மூட்டுவலி குறையும்.
ஆரஞ்சு மற்றும் கொய்யா பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் இருப்பதால் இவை உடலில் உள்ள வீக்கத்தையும், மூட்டு வலியையும் குறைக்கும்.
மாம்பழம் மூட்டு வலியைக் குறைக்க மாம்பழம் உதவுகிறது. இதில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள், கரோட்டின் ஆகியவை உள்ள நிலையில், மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.