குடும்பத்துடன் விஜய்யை சந்தித்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகை ரம்பா
நடிகை ரம்பாவின் குடும்பத்தை கடந்த வருடம் சந்தித்த நிலையில், இதற்கு பின்னே இருக்கும் கதையை தற்போது ரம்பா ஓபனாக கூறியுள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரம்பா. பின்பு விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், நினைத்தேன் வந்தாய் என பல படங்களில் நடித்திருந்தார்.
மின்சார கண்ணா படத்தில் ஊதா ஊதா ஊதாப்பூ பாடல் இன்றும் ரசிகர்களை கவர்ந்த பாடலாகவே இருந்து வருகின்றது.

நடிகை ரம்பா 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கனடாவில் வாழ்ந்து வருகின்றார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அவ்வப்போது குழந்தைகளுடம் புகைப்படத்தினையும் வெளியிட்டு வருகின்றார்.
கணவர் கனடாவில் தொழில் செய்துவரும் நிலையில், தற்போது ரம்பா மீண்டும் சின்னத்திரையில் நடுவராகவும் வலம்வருகின்றார்.

விஜய்யுடன் குடும்ப சந்திப்பு
சமீபத்தில் நடிகை தேவயாணி மற்றும் ரம்பா இருவரும் தாங்கள் நடித்த படங்களைக் குறித்து பல விடயங்களை பேசியிருந்தனர்.
இதில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தையும், அவரது குணத்தையும் குறித்து வெளிப்படையாக கூறியிருந்தார்.
அப்பொழுது கடந்த வருடம் விஜய்யை தனது குடும்பத்துடன் சென்று பார்த்து வந்துள்ளார். அதற்கு பின்னே இருக்கும் கதையை தற்போதே ரம்பா உடைத்துள்ளார்.

ரம்பாவின் மகன் விஜய்யின் தீவிர ரசிகராக இருக்கின்றார். ரம்பா விஜய்யுடன் நடித்தது தெரியாமல் இருந்த போது, அவரது கணவர் விஜய்யுடன் அம்மா நடிச்சிருக்காங்க... உனக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார்.
அப்பொழுது ரம்பாவின் மகன் மிகவும் அதிர்ச்சியடைந்து, அன்று முழுவதும் அவரிடம் உண்மையா நடிச்சீங்களா என்று திரும்ப திரும்ப கேட்டிருக்கின்றார்.
அதன் பின்பு தான் விஜய்யிடம் அனுமதி வாங்கி அவரை குடும்பமாக சென்று பார்த்துள்ளார். அப்பொழுதும் தனது மகனுக்கு இருந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனவும் கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |