அடடே அர்ணவின் பாப்பா இவ்வளவு வளர்ந்துட்டாங்களா? ஷீட்டிங் ஸ்பார்ட்டில் குழந்தையுடன் திவ்யா!
அர்ணவின் குழந்தையுடன் ஷீட்டிங் ஸ்பார்ட்டில் திவ்யா இருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் சீரியல்களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
இவர் செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த திவ்யா, அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார்.
அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சர்ச்சைகளுக்கு மத்தியில் குழந்தையுடன் திவ்யா
இந்த நிலையில் இருவருக்கும் இடையில் பல வாக்குவாதங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது பின்னர் அர்ணவும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விடுதலையின் பின்னர் பிரபல தொலைக்காட்சியில் “ செல்லம்மா..” என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே திவ்யா சமிபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு அர்ணவ் பல பெண்களை காதலித்து ஆபாசமாக பேசி அவர்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும் அர்ணவின் காதல் மோகத்தால் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆதாரங்களுடன் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அர்ணவ் காதலித்த பெண்களில் ஒரு வைத்திய பெண்ணும் இருந்தார். பின்னர் அவர் அர்ணவிடம் பேசிய ஒடியோவை அவர் வெளியிட்டிருந்தார்.
ஆனால் திவ்யாவின் ஆதாரங்களை வைரலாக்கி மீடியாக்கள் அர்ணவின் ஆதாரங்களை பெரியதாக கண்டுக் கொள்ளவில்லை.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா குழந்தையுடன் ஷீட்டிங் ஸ்பார்ட்டில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,“ நேற்று பிறந்தால் போல் குழந்தையா இவ்வளவு பெரிய ஆள் ஆகிட்டாங்க..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.