என் கண்முன்னால் சக நடிகையுடன் நெருக்கம்! வயி்ற்றில் எட்டி உதைத்தது ஏன்?
தன் கண்முன்னே சக நடிகையுடன் கணவர் அர்னவ் நெருங்கி பழகி வந்ததாகவும், அதை தட்டிக் கேட்டதால் வயிற்றில் எட்டி உதைத்ததாகவும் தெரிவித்துள்ளார் நடிகை திவ்யா.
அர்ணவுடன் 2ம் திருமணம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை இருக்கிறது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் அர்ணவ் என்பவருடன் பழகி வந்துள்ளார்.
இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில், திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் இந்து முறைப்படியும், இஸ்லாம் முறைப்படியும் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என அர்ணவ் கேட்டுக்கொண்டும் திவ்யா வெளியிட்டதால் பிரச்சனை எழுந்தது.
சக நடிகையுடன் நெருக்கம்
மேலும் கர்ப்பமான விஷயத்தையும் யாரிடமும் கூற வேண்டாம் என அர்ணவ் கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் செல்லம்மா தொடரில் நடித்து வரும் நடிகையுடன் அர்ணவ் நெருக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அடிக்கடி இருவருக்கும் தகராறும் நடந்து வந்துள்ளது, ஒருநாள் படப்பிடிப்பிற்கு நேரடியாகச் சென்று பார்த்தபோது, இருவரும் தனியாக அறையில் நெருக்கமாக இருந்ததாகவும், இதை தட்டிக்கேட்டதற்கு தண்ணீர் பாட்டிலை தூக்கி வீசி, அடித்ததாகவும் கூறியுள்ளார்.
வயிற்றில் எட்டி உதைத்தார்
இதனால் நடந்த சண்டையில் அர்ணவ் கர்ப்பிணியாக உள்ள திவ்யாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதில் ரத்தத்துடன் திவ்யா மயக்கம் அடைந்துள்ளார் என கூறப்படுகிறது.
பின்னர் நண்பர்கள் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திவ்யா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யா புகார் அளித்துள்ளார்.
மேலும், தான் அர்ணவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், அத்தனை வழிகளையும் அர்ணவ் அடைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் திவ்யா.