காதல் கிசுகிசு.... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யாவின் கணவர் அர்ணவ்
நாங்க வெறும் நண்பர்கள் தான், அதனை சிலர் தப்பா பேசுறாங்க என நடிகர் அர்ணவ் பேசிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிப்பாகும் “செவ்வந்தி” சீரியில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை திவ்யா.
திவ்யா, தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவ்வை என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இந்த திருமணம் இரண்டாவது திருமணம் என்பதால், இவர் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தாலும் அர்ணவ்விற்காக மதம் மாறி திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த திருமணத்திற்கு திவ்யாவின் வீட்டில் பெரியளவில் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறிதுக்காலம் சென்றும் தான் கர்ப்பமாக இருப்பதாக திவ்யா கணவர் அர்ணவ்விடம் கூறியிருக்கிறார்.
அர்ணவ் “ குழந்தை வேண்டாம் ” என கோபமுற்று அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
எங்களுக்குள் எந்த உறவும் இல்லை..
இந்த நிலையில் நடிகர் அரணவ் தன்னுடன் இணைந்து நடிக்கும் 'செல்லம்மா' சீரியல் நடிகை காதலிப்பதாக திவ்யா குற்றஞ்சுமத்தியிருந்தார்.
அப்போது, அதனை ஆதரிக்கும் விதமாக குறித்த நடிகையும் திவ்யாவிற்கு கோல் செய்து பேசியிருப்பார். இப்படியொரு நிலையில் இருவரும் பேட்டியொன்றில் கலந்து கொண்டிருந்தார்கள்.
அதில்,“ நாங்க இருவரும் நல்ல நண்பர்கள், எங்களை தப்பா பேசாதீங்க. எங்களுக்குள் வேறு எந்த தவறான எண்ணமும் இல்லை. அத்துடன், அனுசிதாவிற்கு ஒரு நல்ல வாழ்க்கை வேண்டும்.
எங்களை பார்த்து சிலர் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறுவார்கள். ஆனால் எங்களுக்குள் இது மாதிரியான எந்த உறவும் இல்லை.” என பேசியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ அர்ணவின் வாழ்க்கையை முடித்து விட்டு மீண்டும் ஒரு திருமணமா? என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.