கையில் புது மோதிரம்- கணவருடன் நெருக்கமாக புகைப்படம் வெளியிட்ட அர்ஜுன் மகள்
கையில் கணவர் அணிவித்த மோதிரத்துடன் அர்ஜுன் மகள் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் “ஆக்சன் கிங்” என அழைப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன்.
இவர், 90ஸ் கிட்ஸ்களுக்கு பேவரைட் கதாநாயகனாக வலம் வருந்தார். அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் கதாநாயகனாக தான் கலக்கி கொண்டு இருக்கிறார்.
அவருடைய மூத்த மகள் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலிக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததும் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.
இரண்டாவது மகள் திருமணம்
அதே போன்று தற்போது இரண்டாவது மகளும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது அஞ்சனாவுக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
அஞ்சனா கடந்த 13 வருடங்களாக காதலித்து வந்த வெளிநாட்டவரை திருமணம் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதன்போது குடும்பமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அஞ்சனா அவருடைய சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்களை பார்த்த பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |