மகன் கிரிக்கெட் விளையாடுவதை நான் பார்க்க மாட்டேன்: உண்மையை உடைத்த சச்சின்
கிரிக்கெட் பயணத்திலிருந்து கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகில் தடம் பதித்த நிலையில், U19 மற்றும் மும்பை அணிக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம்பிடித்தார்.
இருப்பினும், அவர் ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்த ஆண்டும் ஏலத்தில் மும்பை அணி அர்ஜுனை 30 லட்சத்திற்கு எடுத்துள்ளது.
சச்சின் சமீபத்திய நேர்காணலில், அர்ஜுன் விளையாடுவதை தான் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். அர்ஜுன் சுதந்திரமாக விளையாட வேண்டும் என்றும், குறிப்பாக அவரது தந்தையின் கண்காணிப்பில் எந்த ஒரு அழுத்தத்திலும் இருக்க விரும்பவில்லை என்றும் சச்சின் கூறியுள்ளார்.
இருப்பினும், சில போட்டிகளை சில சமயங்களில் யாருக்கும் தெரியாமல் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
"அப்பாவும் அம்மாவும் தனது பிள்ளைகள் விளையாடுவதைப் பார்க்கும்போது மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர், அதனால் தான் அர்ஜுன் விளையாடுவதை நான் பார்ப்பதில்லை. ஏனென்றால் கிரிக்கெட்டைக் காதலிக்க, அதில் முழு கவனம் செலுத்த அவருக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் நேரில் சென்று அர்ஜுன் விளையாடுவதைப் பார்க்க மாட்டேன், அவன் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.