நடிகர் அர்ஜுன் வீட்டில் நடைபெற்ற விசேஷம்... மகிழ்ச்சியில் குடும்பம்
நடிகர் அர்ஜுன் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் முன்னணி நடிகராக வலம் வருகின்றார்.
பல படங்களில் ஆக்ஷனில் மிரட்டியதுடன், குணச்சித்திர ரோல்களில் நடித்து வருகின்றார். நடிகராகவும் மட்டுமின்றி இயக்குநராகவும் வலம் வருகின்றார்.
இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் ஐஸ்வர்யா தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த ஜோடிக்கு திருமணமாகி இன்றோடு ஓராண்டு நிறைவடையும் நிலையில், தனது முதல் திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.
குறித்த இந்த தம்பதிகளுக்கு பலரும் அவர்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
