அர்ஜுனின் இரண்டாவது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் செல்ஃபி புகைப்படம்
நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா வெளிநாட்டு நபருடன் எடுத்துக்கொண்ட செல்பி வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ஜுன்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் ஆக வலம் வரும் நடிகர் அர்ஜுன், சமீபத்தில் தனது மூத்தமகள் திருமணத்தை கோலாகலமாக நடத்தினார்.
தற்போது 60 வயதைக் கடந்தும் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஆக்ஷனில் அசத்தி வருகின்றார். சமீபத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.
இந்நிலையில் அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகின்றார். மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், இளைய மகள் அஞ்சனா காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது அஞ்சனா வெளிநாட்டு நபர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் அஞ்சனாவின் காதலரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகாத காரணத்தால் குறித்த நபர் நண்பராக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |