நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு... கணவரை விட 3 மடங்கு அதிகமாம்
நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய்
உலக அழகியானபின் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
பின்பு நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் பிரிய உள்ளதாகவும், விரைவில் இந்த பிரச்சினை வெளியுலகிற்கு தெரியும் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற அம்பானி வீட்டு திருமணத்திற்கு கூட ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மட்டுமே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு என்ன?
ஐஸ்வர்யா ராய் பல சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் வைத்து கொண்டு அதன்மூலம் பல கோடி சொத்துக்களை வாங்கி வைத்துள்ளார்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ராய் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வசூலிப்பதாகவும், பிராண்ட்களின் படப்பிடிப்பிற்காக ஒரு நாளைக்கு 6 முதல் 7 கோடி ரூபாய் வரையிலும் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் 862 கோடி ரூபாய் சொத்துக்களை கொண்டுள்ளதாகவும், இவரை விட கணவர் அபிஷேக் 3 மடங்கு குறைவான சொத்துக்களை வைத்துள்ளாராம்.
கணவர் அபிஷேக் பச்சனின் சொத்தின் நிகர மதிப்பு 280 கோடி ரூபாய் மட்டுமே ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |