ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதா? கொந்தளித்த வைரல் இளைஞனின் தாய்!
புதிதாக KTM பைக் வாங்கி அதனை ரீல்ஸ் பதிவிட்ட அரியலூர் இளைஞரின் காணொளி இணையத்தில் வைரலானதுடன், குறித்த பதிவு அதிகமாக எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானது.
பைக் வாங்கியதால் சர்ச்சை
குறித்த காணொளியில் KTM பைக்கை அந்த இளைஞர் வாங்குகிறார். அவருடன் அவரின் அம்மா, அப்பா வயதில் 2 பேர் இருக்கின்றார்கள்.

குறிப்பாக அவருடன் இருந்த அம்மா எந்தவித தங்க ஆபரணங்களையும் அணிந்திருக்கவில்லை. அதனால் குறித்த இளைஞன் அம்மா அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து இந்த பைக்கை வாங்கியுள்ளார் என நினைத்து பெரும்பாலான நெட்சன்கள் குறித்த இளைஞனை விமர்ச்சித்தனர்.

இந்நிலையில், இது குறித்து சம்பந்தப்ட்ட இளைஞன் விளக்கமளித்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், அந்த காணொளியில் தன் அருகில் இருந்தது அம்மா இல்லை.. என் அத்தை என குறிப்பிட்டதுடன் தான் சேமித்து வைத்த பணம் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் கொடுத்த பணம் ஆகியவற்றை கொண்டே குறித்த பைக்கை வாங்கியதாகவும் குறிப்பிட்டு, எங்கள் பணத்தில் நாங்கள் பைக் வாங்குவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இது குறித்து பேசிய இளைஞனின் தாயார், பையன் ஆசைப்பட்டான் பைக் வாங்கிக்கொடுத்தோம்.. அதில் என்ன பிரச்சினை.. நான் சம்பாதிக்கிறேன்.. என் பையனும் சம்பாதிக்கின்றான்... வண்டியில் பொறுமையா போ என அட்வைஸ் பண்ணுங்க..
அதுல தப்புல்ல ஆனால், அத விட்டுட்டு தேவையில்லாம கமெண்ட் பண்ணாதீங்க. ஏழைங்கன்னா இந்த வண்டி வாங்கி ஓட்ட கூடாதுனு ரூல்ஸ் இருக்கா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |