வியர்வையால் கழிவை வெளியேற்றி மெல்லிய உடலை தரும் கொத்தமல்லி தண்ணீர்
தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு உடல் எடை அதிகரி்ப்பு பெறும் பிரச்சினையாக இருக்கிறது.
இந்த அவசர உலகில் இருக்கும் துரித உணவுகள் தான் காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்த பிரச்சினை ஒரு நேரம் இல்லாமல் சாப்பிடுதல், அதிக துரித உணவுகள் சாப்பிடுதல், கொழுப்பு கலந்த உணவுகள் அதிகம் சாப்பிடுதல், டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருத்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.
இதற்கு பல யூடியூப் சேனல்களில் இருக்கும் வீடியோக்களை பார்த்து டயட் பின்பற்றுவார்கள். ஆனால் அதனை சிலருக்கு தொடர்ச்சியாக பின்பற்ற முடியாது.
இவ்வாறு டயட் செய்பவர்கள்“வரும் முன் காப்போம்” என்ற கூற்றை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். உடம்பு வந்த பிறகு அதனை குறைப்பது என்பது நூறு சதவீதம் சாத்தியப்படாது. ஆனால் சில டிப்ஸ்கள் தொடர்ந்து செய்து வந்தால் என்பது சதவீதம் சாத்தியப்படுத்தலாம்.
இதன்படி, வீட்டிலுள்ள கொத்தமல்லியை வைத்து ஒரு மருத்துவம் செய்து உடம்பை குறைக்கலாம் என முன்னோர்கள் கூறுவார்கள்.
அந்த வைத்தியம் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கொத்தமல்லி - 2 ஸ்பூன்
- கிளாஸ் - 1
- தண்ணீர் - தேவையானளவு
செய்முறை
இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து, அதில் கொத்தமல்லியை போட்டு முடி வைத்து விட்டு, காலையில் எழுந்தவுடன் வெறும் வயற்றில் குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து விட்டு வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
கொத்தமல்லி தண்ணீரால் கிடைக்கும் நன்மைகள்
1. கொத்தமல்லியை குடிப்பதால் உடலுக்கு தேவையான பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், போலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
2. வியர்வையில் உடற்பயிற்சி செய்வதால் பாதி கழிவுகள் வியர்வையில் வெளியேறும்.
3. உடலில் இருக்கும் செரிமான அமைப்பை மேம்படுத்தப்படும்.
4. காலையில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் செரிமானத்திற்கான நொதியங்கள் சுரந்து செரிமானம் சீராக நடக்கும்.
5. கெட்ட கொழுப்புக்களை கரைத்து உடல் எடையை குறைக்கும்.
6. உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்களை தந்து உடலின் ஜீரண ஆற்றலை மேம்படுத்தும்.
7. பக்க விளைவுகள் குறைவு.