மேஷ ராசியாக நீங்கள் இருந்தால் எந்த ராசியினரை திருமணம் செய்யலாம்?
திருமண வாழ்கை சிறக்க ஜாதகம் பார்ப்பது வழக்கம். அதே போல ஒன்று தான் ராசி ஜோடியும் இதன் மூலம் இந்த பதிவில் மேஷ ராசிக்காரர்கள் எந்த ராசியினரை திருமணம் செய்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமையும் என பார்கலாம்.
திருமண வாழ்க்கை
திருமணம் என்பது இருமனங்களின் விருப்பப்படி ஒன்று சேரும் ஒரு நிகழ்வு. ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு பிரச்சனைகள் வருகின்றன.
இதற்கு காரணம் அவர்களுள் புரிந்துணர்வு இல்லாவிடிலும் சில ஆன்மீக காரணங்களும் உள்ளன. கல்யாண வாழ்க்கையோ காதல் வாழ்க்கையோ சந்தோஷமாக இருக்க வேண்டும் எனில் சரியான ராசி பார்த்து ஜோடி சேர வேண்டும்.
ஆனால் இது கட்டாயம் இல்லை இருந்தும் இந்த நியதியில் செயல்பட்டால் வாழ்கை அமோகமாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அந்த வகையில் மேஷ ராசிக்காரர்கள் சில ராசிக்காரர்களை திருமணம் செய்தால் நன்மை தரும். மேஷம் மற்றும் கடக ராசிக்காரர்கள் இருவரும் ஒன்று சேரும் வாழ்கை தித்திக்கும்.
மேஷ ராசி அதிபதி செவ்வாய் பகவான். நெருப்பு ராசிக்காரர்கள் துணிச்சலும், நம்பிக்கையும் மிக்கவர்கள். கடக ராசிக்கு அதிபதி சந்திரன் மனோனோகரகன்.
நெருப்பான மேஷ ராசியினாரை கடக ராசியினர் திருமணம் செய்து கொண்டால் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கை நடத்துவார்களாம். இந்த இரண்டு ராசியினரிடமும் நல்ல புரிந்துணர்வு கிடைக்கும்.
மேஷம் மற்றும் கும்ப ராசியினருக்கிடையில் சந்தோஷமான வாழ்க்கை நிலவும். மேஷம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். காதலில் வெற்றி பெற தைரியமும் சுறுசுறுப்பும் அவசியம்.
கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் பொறுமைசாலிகள். ஒருவரின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு எப்படி கையாள்வது என்பதை நன்கு அறிந்து கொண்டவர்கள். இந்த இரண்டு ராசிக்காரர்களும் இணைந்தால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது.