அடிக்கடி பசிக்குதா?
பசி என்பது திடீரென்று வந்தால் பரவாயில்லை. உணவு உண்ட பின்பும் அதிக பசி ஏற்பட்டால், அல்லது அடிக்கடி பசி வந்தால், எப்போதுமே பசி உணர்வுடன் இருந்தால் அது ஆபத்தில் முடியலாம்.
இதன்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
கவனச் சிதறல் - சாப்பிடும்போது பொழுதுபோக்கிற்காக டி.வி அல்லது கையடக்கத் தொலைபேசி பார்ப்பது நல்லதல்ல. சாப்பிடும்போது அதில் கவனம் இல்லாமல் கவனச் சிதறல் ஏற்படுமாயின் அது பசி உணர்வை தூண்டிவிடும்.
பொறுமையாக உண்ணாமை - உணவை மென்று மெதுவாக சாப்பிடாமல் வேகமாக சாப்பிடுவதனால் பசி போய்விடும். ஆனால், சில மணிநேரம் கழித்து மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும்.
மன அழுத்தம் - பதட்டத்துடன் இருக்கும்பொழுது கார்டிசோல் என்ற ஹோர்மோன் அதிகமாக சுரப்பதால் பசி உணர்வு அதிகப்படியாக இருக்கின்றது.
புரத உணவு - குறைந்தளவு கொழுப்பு, புரதம் நார்ச்சத்து உள்ளடங்கிய உணவுகளை உண்ணும்பொழுது பசி தூண்டப்படும்.
ரத்த சர்க்கரை - நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படும்.