வேகவைத்த வேர்க்கடலை டைப் 2 சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க
வழக்கமாக நாம் சாப்பிடும் வேர்க்கடலையில் ஏராளமான ஆரோக்கிய பலன்கள் உள்ளது. இதனால் தான் வேர்க்கடலையை “ஏழைகளின் பாதாம்” என அழைக்கிறார்கள்.
100 கிராம் வேர்க்கடலையில் சுமாராக 567 கலோரிகள், 25 கிராம் புரதம், 16 கிராம் கார்போஹைட்ரேட், 8 கிராம் நார்ச்சத்து, 49 கிராம் கொழுப்பு மற்றும் 15 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
அத்துடன் வைட்டமின்கள் பி1, பி3, பி7, பி9, ஈ போன்றவையும், காப்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. வேர்க்கடலையில் அதிகமான அளவு அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் ரெஸ்வெராட்ரோல், ஐசோபிள வினாய்ட்ஸ், பைடிக்ஆசிட், பைட் டோஸ்டீராய்ட்ஸ் போன்ற ஆண்டி ஆக்சிடன்டுகளும் உள்ளன.
வேர்க்கடலை 14 என்ற மிக குறைந்த அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ் இருந்தாலும் அதிக அளவு கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது. அதே சமயம், மிக குறைந்த அளவே சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், வேர்க்கடலையை வேக வைத்த பின்னர் டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாப்பிட கொடுக்கலாமா? என்பதனை பதிவில் பார்க்கலாம்.
சர்க்கரை நோயாளர்கள் சாப்பிடலாமா?
வேர்க்கடலையில் இருக்கக்கூடிய அதிகமான அளவு நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தும். இதன் காரணமாக உணவு சாப்பிட்ட பின்னர் உடனே ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கப்படுகிறது.

Food recipe: உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல்- இதுவரையில் யாரும் செய்யாத பக்குவத்தில் செய்ய தெரியுமா?
மேலும், வேர்க்கடலையில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மெக்னீசியம் இன்சுலின் சுரப்பதை துரிதப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
வேர்க்கடலையில் புரதம், தசைகளின் வளர்ச்சி மற்றும் வலுப்படுத்தும் சக்தி உள்ளது. ஏனெனின் வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் பி3, பி9 அறிவாற்றல் செயல்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுகிறது.
ரெஸ்வெராட்ரோல் எனப்படும் பயோ ஆக்டிவ் சேர்மங்கள் முதுமை தோற்றத்தையும் சீர்ப்படுத்தும். வேர்க்கடலையை வேகவைத்து சாப்பிடும் பொழுதும், வறுத்து வேக வைத்து சாப்பிடும் பொழுதும் 4 மடங்கு அதிகமான அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
முக்கிய குறிப்பு
வேர்க்கடலை சாப்பிட்டால் ஒவ்வாமை உள்ளவர்கள் முற்றாக சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனின் வேர்க்கடலை தோலில் உள்ள சத்துக்களை முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் நீக்காமல் சாப்பிட வேண்டும்.
பச்சையாக வேர்க்கடலை சாப்பிடும் ஒருவருக்கு அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேக வைத்து சாப்பிடும் பொழுது பாதிப்புக்கள் குறைவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |