அர்ச்சனாவின் வெற்றிக்கு விஷ்ணு நடுவீதியில் செய்த காரியம்
பிக் பாஸ் அர்ச்சனாவிற்காக விஷ்ணு நடுரோட்டில் செய்த செயல் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் அர்ச்சனா
பிரபல ரிவியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7ல் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வரலாற்றிலேயே இவர் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாராம். மேலும் எந்தவொரு வைல்டு கார்டு போட்டியாளரும் வெற்றி பெற்றதில்லை.
ஆனால் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்ற போட்டியாளரில் ஒருவர் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும். அர்ச்சனாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாப் 5 போட்டியாளர்களின் ஒருவரான விஷ்ணு, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒரு விஷயத்தை கூறினார்.
தினேஷ், அர்ச்சனா, மணி இவர்கள் மூவரில் யார் வெற்றிபெற்றாலும் 10000 வாலா பட்டாசு வெடிப்பேன் என கூறியிருந்தார்.
அதன்படி, பிக் பாஸ் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவிற்காக தற்போது நடுத்தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார் விஷ்ணு.
விஷ்ணு பிக் பாஸ் வீட்டில் சொன்னதை செஞ்சு விட்டாரே என ரசிகர்கள் புகைப்படத்தை வைரலாக்கியதுடன், அவரை புகழ்ந்தும் வருகின்றனர்.
Sonnatha seinjitaaru #VishnuVijay ???#BiggBoss7Tamil #BiggBossTamilpic.twitter.com/cokK0Blakt
— VCD (@VCDtweets) January 17, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |