15 வயதிலேயே அர்ச்சனாவின் மகளுக்கு இப்படியொரு பிரச்சினையா? சாராவின் நிலையால் அதிர்ந்து போன ரசிகர்கள்
தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாரா மீடியாவில் இருப்பதால் அவருக்கு நண்பர் இல்லை என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புதியதாக சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை அம்மாவுடன் இணைந்து சாரா தொகுத்து வழங்குகின்றார்.
இந்த நிலையில் இருவரும் இணைந்து அண்மையில் பேட்டி கொடுத்துள்ளார்.

எனக்கு நண்பர்களே கிடையாது...சாரா உருக்கம்
அதில் சாரா பேசும்போது, நான் மீடியாவில் இருப்பதால் எனக்கு நண்பர்களே கிடையாது.
நண்பர்கள் என்றால் எனக்கு என் அம்மா மட்டும் தான் என்று கண்கலங்கி பேசியுள்ளார்.
அர்ச்சனா இதற்கு, 15 வயதில் மீடியாவில் இருப்பதால் நண்பர்களே கிடையாது என்பது மிகப் பெரிய கஷ்டம், அதில் நியாயமே கிடையாது.

ஆனால், அந்த கஷ்டத்தை அவள் பட்டிருக்கிறார். என்னிடம் வந்து அழுவார், நான் எப்போதும் அவளுக்கு நண்பராக இருப்பேன் என கலங்கியபடி அவரும் பேசியுள்ளார்.