அறந்தாங்கி நிஷா மகன் 10ம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் என்ன? வெளியான காணொளி
சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவரும் அறந்தாங்கி நிஷா தனது மகன் குறித்து வெளியிட்ட காணொளி வைரலாகி வருகின்றது.
அறந்தாங்கி நிஷா
சின்னத்திரையில் தனது கலகலப்பான பேச்சினால் ரசிகர்களை கவர்ந்துவருவபர் தான் அறந்தாங்கி நிஷா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார்.
இவரது பேச்சு திறமை மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுடன், சிந்திக்கவும் வைக்கின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தது.

அப்பொழுது தனது மகன் 10ம் வகுப்பில் 321 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளதாக காணொளி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்ற மற்ற பெற்றோர்கள் மாதிரி நிஷாவும் பயந்து கொண்டிருந்ததாகவும், தனது மகன் எடுத்துள்ள மதிப்பெண் தனக்கு மகிழ்ச்சியினை அளிப்பதாகவும் இருக்கின்றது.
குறைவான மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக தனது காணொளியில் பேசியுள்ளார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில், இவரது காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |